தமிழ்நாடு அரசு ஒன் ஸ்டாப் சென்டர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000
மாவட்ட ஆட்சியர் மதுரை அவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாதிக்கப்பட்ட (சகி) பெண்களுக்கான கூடுதல் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சமூக நலத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | உசிலம்பட்டி, மதுரை |
ஆரம்ப தேதி | 12.07.2024 |
கடைசி தேதி | 31.07.2024 |
பணியின் பெயர்: வழக்கு பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும்.
2. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.
3. அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் இருத்தல் வேண்டும்.
4. சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்.
5. பயண செலவு மீள பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6. 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை – 625020. தொலைபேசி எண்: 0452 – 2580181.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: மதுரையை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |