
what-happened-to-the-5-people-who-went-to-see-the-titanic-recently-released-update-now-read-it
கடந்த 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் டைடானிக் என்ற கப்பல் மூழ்கியது. கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க அமெரிக்க நிறுவனமான ஓஷன் கேட் நிறுவனம் சிறப்பு சுற்றுலா சேவை அளித்து வந்தது. இந்த சுற்றுலாவுக்கு பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் டைட்டானிக் நிபுணர் ஒருவரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர் ஜூன் 19 அன்று கடலுக்குள் சென்றனர்.
கடலுக்கு அடியில் சென்ற சில மணி நேரத்திலேயே நீர்மூழ்கி கப்பலின் சிக்னல் கட்டானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான இந்த கப்பலை கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் கனடா நாட்டின் கப்பல் படையினர் நேற்று தேடியபோது காணாமல் போயிருந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறிய பாகங்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த நிலையில் அந்த சிறிய நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துவிட்டதாக ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்துள்ளது.