ஆதார் கார்டு என்று சொன்னால் அது மிகையாகாது. மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஆதார் கார்டு மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாத அளவிற்கு ஆதார் முக்கிய பங்கு வகுக்கிறது.
இந்நிலையில், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் கார்டை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று ஆதார் கார்டை அப்டேட் செய்ய ஆன்லைன் மூலமாகவும் அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாக செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்களின் சிரமத்தை போக்க ஆன்லைன் மூலமாக அருகில் இருக்கும் ஆதார் கார் மையங்களை கண்டறியும் படியான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,
- முதலில் https://appointments.uidai.gov.in/easearch.aspx என்கிற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதில், நகரம், மாவட்டம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
- அதன்பின், ‘நிரந்தர மையங்களை மட்டும் காட்டு’ என்னும் பகுதியை கிளிக் செய்து கேப்சாவினை நிரப்ப வேண்டும். அதில், ‘ஒரு மையத்தை கண்டறி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அருகில் இருக்கும் அனைத்து ஆதார் மையங்கள் தொடர்பான பட்டியில் தோன்றும்.