- தேர்வு, நேர்காணல் இல்லாமல் வனத்துறை வேலைவாய்ப்பு 2021!!
மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Upper Division Clerk பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவாளர்கள் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | MOEF |
பணியின் பெயர் | Upper Division Clerk |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Upper Division Clerk பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
MOEF கல்வித்தகுதி :
- Central Government/ State Government/ Union Territories/ Autonomous/ Statutory organization/ Public Sector Undertakings/ University/ Recognized Research நிறுவனங்களில் Officers பணிபுரிய வேண்டும்.
- வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
MOEF ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியமாக பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.