ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

 

ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டையில் முகவரியை ஆன்லைன் மூலம் மாற்றும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ஆதார் அட்டை :

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகும். இந்த ஆதார் அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி பயோமெட்ரிக் கைரேகை, கருவிழி உடற்கூறு விவரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். தற்போது ஆதாரில் தேவையான மாற்றங்களை செய்யும் வசதியை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தி வருகிறது.

ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக நாம் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தேவைக்கேற்ப மாற்றி கொள்ளலாம் அல்லது இ-சேவை மையத்தை அணுகியும் விவரங்களை மாற்றி கொள்ளலாம். வங்கி பணப் பரிவர்த்தனை, சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல் போன்ற பணிகளுக்கு ஆதார் இருப்பிட சான்றாகவும் கருதப்படுகிறது. அதனால் இருப்பிட முகவரி ஆதார் கார்டில் சரியாக இருப்பது அவசியம். இந்த நிலையில் ஆதாரில் ஆன்லைன் மூலம் முகவரி மாற்றும் பணியை மேற்கொள்ளும் எளிய வழிமுறைகளை ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆதாரில் முகவரி மாற்றம் செய்யும் வழிமுறைகள் :
  • முதலில் ssup.uidai.gov.in/ssup/ என்ற UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
  • அதில் ‘Proceed to Update Aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் ஆதார் கார்டு விவரங்களை பூரித்து செய்யவும்.
  • அதன் பிறகு உங்களது மொபைல் நம்பரை பதிவிட்டு, செல்போனுக்கு வரும் OTP நம்பரை பதிவிட வேண்டும்.
  • அதில் புதிய முகவரியும், ஆதார் கார்டு தகவல்களையும் பதிவிட வேண்டும்.
  • முகவரி மாற்றத்தின் போது உரிய சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *