உபியில் கணவனை கட்டி போட்டு கொடுமைபடுத்திய மனைவி வைரல் வீடியோ

உத்தரபிரதேசத்தில் மனைவியால் தாக்கப்பட்ட கணவனின் வைரல் வீடியோ

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனன் ஜைதி இவரது மனைவி பெயர் மெஹர் ஜஹான் திருமணம் ஆகி 1 வருடம் ஆகியுள்ளது.

இவர் கணவனுக்கு தெரியாமல் வேறு நபருடன் பழகியது தெரியவந்து மனைவியை கண்டித்துள்ளார், ஆனால் அவர் தனது கள்ள காதலை விடாமல் இருந்துள்ளார் இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது

இந்நிலையில் பாலில் போதையை கலந்து கணவருக்கு தந்து மயக்கத்தை ஏற்படுத்தி கொடூரமாக கணவனை அடித்துள்ளார்  காலை தூங்கி எழுந்தபோதும், உடலில் பல இடங்களில் காயங்கள் இருக்கும்

தனது மனைவியின் கொடுமைகளை ஆதாரத்துடன் நிரூபிக்க மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய பெட்ரூமில் கேமரா ஒன்றை வாங்கி ரகசியமாக பொருத்தியுள்ளார்.

வழக்கம்போல் கணவனுக்கு பாலில் போதை மருந்து கொடுத்து கட்டிலில் கட்டிப்போட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார் இவை அனைத்தும் அந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள அந்த வீடியோவில் கணவனின் கை கால்களை துணியால் கட்டிலில் கட்டிப்போட்டுவிட்டு, பெரிய கம்பால் அடிக்கின்றார்அடுத்து அவர் மீது ஏறி உட்கார்ந்து குரல்வளையை நெரிக்கிறார்.

அதன்பின்பு சிகரெட் புகைக்கிறார்.. அதன் பின்பு கணவனின் உடம்பெல்லாம் நெருப்பால் சுடுகிறார். அடுத்து கத்தியை எடுத்து வந்து, கணவனின் ஆணுறுப்பை கீறி காயப்படுத்துகிறார்

மறுநாள் இந்த வீடியோ காட்சிகளுடன் காவல் நிலையம் சென்று மனைவி மீது புகார் அளித்துள்ளார் , புகாரின்பேரில், மெஹர் ஜஹான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, தாக்குதல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/kalgikumaru/status/1787725728009867702

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *