தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழக பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழக அரசு வயது வரம்பு:
01.03.2021 தேதியின் படி,18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பானது கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
- B.C (Muslim) -32
- S.C -35
- M.B.C & D.C -32
- மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், ஆதரவற்ற விதவைகள் -35
- மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், மாற்றுத் திறனாளிகள் – வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்.
- மேற்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பினரில், முன்னாள் ராணுவத்தினர் – 53
அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (பள்ளி/கல்லூரியினால் வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்).
அலுவலக உதவியாளர் சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் நிலை 1ன் படி,
ரூ.15700-50000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
குறிப்பு:
- பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் சார்ந்தோருக்கான காலிப்பணியிடத்திற்கு முன்னுரிமை பெற்றவருக்கு (முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள்) முன்னுரிமை வழங்கப்படும்.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைடச சார்ந்தோருக்கான காலிப்பணியிடத்திற்கு தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006. என்ற முகவரிக்கு 30.10.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Recent Comments