தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை – அரசு போக்குவரத்துத் துறை புதிய திட்டம்!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சுமார் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது என அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.

பேருந்துகள் இயக்கம்:

தமிழகத்தில் கடந்த மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் அனைத்து அரசு பேருந்துகளும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அரசின் முயற்சியால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததும் மக்களின் போக்குவரத்து தேவைக்காக மாவட்டங்களுக்கு இடையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. மேலும் முதல்வரின் அறிவிப்பு படி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் அரசு பேருந்துகளில் செல்லும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து வசதியால் போக்குவரத்து துறை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. எப்போது தமிழகத்தில் விழாக்காலங்களில் மக்களின் தேவை கருதி வழக்கத்தை விட கூடுதலாக பேருந்து இயக்கப்படும். ஏனென்றால் விசேஷ தினங்களில் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

அதன்படி தற்போது அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு 4 நாட்கள் வார இறுதி விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர். அதனால் சென்னையில் இருந்து சுமார் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்து பயணத்திற்கான முன்பதிவு தளத்தையும் அறிவித்து அதில் அதிகளவில் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *