குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் ரேசன்கடையில் கைரேகையை பதியவேண்டும்! முழு விவரம்

குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் கூறி வருகின்றார்கள்

நியாயவிலைக் கடைப் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்கள் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது.

இந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களை உறுதி செய்யும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அதாவது, அட்டையில் பெயா் உள்ள அனைவரும் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து விரல்ரேகையை பதிவு செய்து அட்டையில் பெயா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடைமுறை தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் எனவே குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் கட்டாயம் கடைக்கு வந்து கைரேகை வைக்க வேண்டும் என நியாயவிலை கடை பணியாளர்கள் தெரிவித்து வருகின்றார்கள்

இதனால், குடும்ப அட்டைதாரா்கள் பெரும் அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா். சில குடும்ப உறுப்பினர்களில் மாணவா்கள் தங்களது உயா் படிப்புக்கான வெளியூா்களில் தங்கி படித்து வருவார்கள், அதேபோல் வேலை நிமித்தமாகவும் வெளிநாடு சென்று- அங்கேயே தங்கி பணி புரிபவர்களை இந்த நிலை மிகவு சிக்கலை உருவாக்கும் என கூறப்படுகின்றது

இந்நிலையில் தற்போது, குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பொருட்கள் அளவு குறைக்கப்படும். பெயர் நீக்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *