வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு கண்டுபிடிக்கப்படுதோ அதே அளவிற்கு மனித உடலில் ஏற்படும் நோய்களும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயதில் இருப்பவர்களுக்கு கூட சர்க்கரை, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதாக மத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நோய்கள் எந்த அளவிற்கு அதிகமாகிறதோ அதனை கட்டுப்படுத்த உதவும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மனதளவிலும் சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், அதிக அளவில் மாத்திரைகள் எடுத்து கொள்வதை தவிர்க்கும் வகையில் ஸ்விஸ் கார்னியர் மருந்து உற்பத்தி நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, 3 மாத்திரைகள் எடுக்க வேண்டிய ஒருவர் இனி ஒரு மாத்திரை மட்டும் எடுத்தால் போதுமானது. ஏனெனில், 3 மாத்திரைகளில் உள்ள குணங்கள் அனைத்தும் ஒரே மாத்திரையில் கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விஸ் கார்னியர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இந்த புதிய வகை மாத்திரைகளுக்கு அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளதாக ஸ்விஸ் கார்னியர் நிறுவனர்கள் கூறும் நிலையில் விரைவில் இந்தியாவிலும் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.