தமிழகத்தில் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!


தமிழகத்தில் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 1500 பழைய பேருந்துகள் மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

பழைய பேருந்துகள் மாற்றம்:

தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் அவர்கள் பதவியில் உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவிலான சேதமடைந்த பேருந்துகள் செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக விபத்துகள் நிகழ்வதாகவும் அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதன் பிறகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு 4,200 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 10 வருடத்திற்கு உள்ளான பேருந்துகள் சீரமைக்கப்பட்டு இயக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழ்நாட்டில் இயக்கப்படும் 1500 பழைய பேருந்துகள் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்காக பழைய பேருந்துகளை கைவிடுவதற்கு முன் புதிய பேருந்துகளை வாங்க மத்திய அரசிடம் அவகாசம் கோரியுள்ளதாகவும் விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *