வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3லட்சம் மானியம் – புதிய ஏற்பாடு!

வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3லட்சம் மானியம் – புதிய ஏற்பாடு!
வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3லட்சம் மானியம் – புதிய ஏற்பாடு!

கர்நாடகா மாநிலத்தில் வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.3லட்சம் மானியம்:

கர்நாடகா மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு வாகனம் வாங்குவதற்கு அரசின் தரப்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட இருப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அதாவது, ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சிகள் அல்லது சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு சிறுபான்மை சமூகத்தினர் இந்த மானியத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான நிபந்தனைகளையும் கர்நாடகா அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்த மானியத்தை பெறுவதற்கு கட்டாயமாக கர்நாடகாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக, சிறுபான்மை சமூகத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் KMDCLன் எந்தவொரு திட்டத்திலும் பயன் பெற்றிருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனம் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *