5வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் வேலை 2022 – மாத ஊதியம் ரூ.35,100..!
தேனி வருவாய் துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கிராம உதவியாளர் பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Revenue Department, Theni |
பணியின் பெயர் | Village Assistant |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Village Assistant காலிப்பணியிடங்கள்:
தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் Village Assistant பணிக்கென மொத்தமாக 08 காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கிராம உதவியாளர் தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தேனி, உத்தமபாளையம் வட்டத்தில் அல்லது அதன் எல்லைப் பகுதியில் வசிப்பவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Village Assistant வயது விவரம்:
01.07.2021 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் 32 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
theni-revenue-department-village-assistant-recruitment-notification-2022
கிராம உதவியாளர் ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்களுக்கு அரசு ஊதிய அளவின் படிநிலை – 6 ன் படி ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
Village Assistant தேர்வு முறை:
- எழுத்து தேர்வு.
- சான்றிதழ் சரிபார்ப்பு.
கிராம உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 18.03.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் வண்ணம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.