- ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு என் .நான் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை சான்றிதழ் முடித்துவிட்டு தட்டச்சு தொழில் பயிற்றுனர் தேர்வுக்கான விண்ணப்பத்தினை எதிர்நோக்கி காத்து இருந்தேன்.ஆகஸ்ட் 6ந்தேதி அதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.அதில் விண்ணப்பதாரர்க்கு வயது 25 பூர்த்தி ஆகி இருக்கவேண்டும் என்றும் தட்டச்சு பயிலகத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமாறு நிபந்தனைகள்
உள்ளன.இதனால் பயிலக உரிமையாளர்கள் தவிர வேறு பொது பிரிவினர் விண்ணப்பிக்க முடியாது நிலையும் உள்ளது.இதனால் வேலை வாய்ப்பு இல்லாத என்னை போன்ற இளைஞர்களுக்கு இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.தமிழகத்தில் எந்த ஒரு தேர்வுக்கும் வயது வரம்பு 18 வயது என்று இருக்கும் நிலையில் இந்த தேர்விற்கான வயது வரம்பை 25 என நிர்ணயித்து இருப்பதும். தட்டச்சு பயிலக உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறுவதும்.ஏதோ உள் நோக்கத்துடன் விண்ணப்பம் வெளியிடப்பட்டது போல் தோன்றுகிறது.இந்த தேர்வு ஏதோ தட்டச்சு பயிலகங்களுக்கு மட்டுமே உரிமையானது போலவும் ஏழை மாணவர்கள் இதை தெரிந்தோ தொரியாமலோ தவறி கூட கற்றுக் கொள்ளவே கூடாது என்பதைப் போலவும் உள்ளது.எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஐயா அவர்கள் இந்த தட்டச்சு தொழில் பயிற்றுனர் தேர்விற்கான விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்து அனைத்து பொது பிரிவு இளைஞர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக மாற்றி வெளியிட டோட்டிற்க்கு வலியுறுத்துமாறும் ஒவ்வொரு மையத்திற்கும் 75 நபர்களுக்கு என்ற எண்ணிக்கையை 200 நபர்களாக உயர்த்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி ஐயா