தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் – உஷார் மக்களே!!
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தற்போது அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பள்ளிகள் இன்று வழக்கும்போல் செயல்பட்டு வருகிறது.
மேலும் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.