தமிழக காவலர்களுக்கான மருத்துவ நிவாரண நிதி ரூ.8 லட்சமாக அதிகரிப்பு – முக்கிய ஆணை!
தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ நிவாரண நிதி:
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என அனைத்து காவல்துறை பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ நிவாரணமாக ரூ. 5 லட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சிறப்பு மருத்துவ நிவாரண நிதியை காவலர்கள் தங்களது பணிக்காலத்தில் மூன்று முறை ரூ. 25,000 வீதம் பெற்றுக் கொள்ளும் படியாக இருந்தது.
இந்நிலையில், கடந்த வியாழன் கிழமை அன்று காவலர் சேமநல நிதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவலர்களுக்கான உச்ச சிறப்பு மருத்துவ நிவாரண நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி உத்திரவிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிதி தொகையை காவலர்கள் தங்களது பணிக்காலத்தில் மூன்று முறை ரூ. 50,000 ஆக பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.