கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் நகரில் கொரோனா என்ற வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த வைரஸானது பல லட்சகணக்காணக்கான உயிர்களை பழிவாங்கியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுகள் ஆகியும் கட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் பல நாடுகளும் தவித்தனர். அதன்பின், கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தினர். இதன் விளைவாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், ஊரடங்கும் தவிர்க்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளான அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என்றும்தொடர்ந்து வைரஸ் பாதிப்பை சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.