நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வழங்கபட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை வாங்க ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை அந்தந்த மாநில அரசால் வழங்கபட்டுள்ளது. ரேஷன் அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 2.24 கோடி குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் புதிய ரேஷன் கார்டு வேண்டி பலரும் விண்ணபித்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணபிப்பிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், தற்பொழுது புதிய ரேஷன் கார்டு வழங்குவதை அரசு முற்றிலும் நிறுத்தியுள்ளது. ஏனென்றால், ரே வீட்டில் வசிக்கும் தாய், தந்தைக்கு ஒரு ரேஷன் கார்டு மகன், மருமகளுக்கு ஒரு ரேஷன் கார்டும் என ஒரு வீட்டிற்கே இரண்டு ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணபித்து வருவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தமிழக மைய தலைவர் டி.சடகோபன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். கார்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.