ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கமிட்டி கூட்டமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கமிட்டி கூட்டத்தில் நாட்டில் பணவீக்க நிலை மற்றும் ரோப்போ வட்டி விகிதம் தொடர்பாக விவாதிக்கப்படும். அதன்படி, இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில், நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதால் குறுகிய கடன்களுக்கான ரெப்போ வடி விகிதத்தில் தற்பொழுது மற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் வாகன கடன் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் RBI தெரிவித்துள்ளது. இதனால், மாத EMI கட்டுபவர்கள் மிகுந்த நிம்மதி மற்றும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.