12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களா நீங்கள்? உங்களுக்கு மார்க் சீட் தராங்களாம்..! உடனே போய் வாங்கிகோங்க…
2022-2023 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழவதும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி தேர்வுத்துறை இயக்கத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர அவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்பொழுது பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் ஒரிஜினல் சான்று எப்பொழுது வழங்கப்படும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவா்களுக்கு...