Category: news

be-careful-people-tamil-nadu-is-going-to-scorch-again-read-now 0

மக்களே உஷாரா இருங்க… தமிழகத்தில் மீண்டும் வாட்டி வதக்கப்போகும் வெயில்..! வானிலை மையத்தின் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் வருடந்தோறும் மே மாதத்தில் தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், தற்பொழுது உள்ள காலநிலை மாற்றத்தால் ஏப்ரல் மாத இறுதியிலேயே கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது. தமிழகத்தில் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் கூற்றுப்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில்...

important-order-sent-to-ration-shops-tamil-nadu-governments-next-action-read-it 0

ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… தமிழக அரசின் அடுத்த அதிரடி!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சகணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள், மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என பல புகார்கள் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒரு சில ரேஷன் பொருட்கள் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்களுக்கு குறுஞ்செய்தி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தமிழக அரசு...

0

தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே!

தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே! தமிழகத்தில் நாளை (ஆக.04) மின்தடை – அலர்ட்டா இருங்க மக்களே! தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.04) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். மின்தடை: பரலாச்சி: கானாவிளக்கு, தொப்பலக்கரை, தும்முச்சின்னம்பட்டி, ராஜகோபாலபுரம் நரிக்குடி: வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம் எரிச்சநத்தம்: நடையனேரி, கோட்டையூர், அம்மாபட்டி பொள்ளாச்சி: பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளட்டி, திப்பம்பட்டி, கஜாம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, மார்க்கெட் ரோடு, எம்.ஆர்.மில் பகுதி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், அம்பராமபாளையம் கரூர்: அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்பு பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திர நாக்ரா காலனி,...

0

உலகின் மிகப்பெரிய காற்றலை எங்க இருக்குன்னு தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…

உலகின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி செய்யும் காற்றாலையை சீனா தொடங்கியுள்ளது. இந்த காற்றாலையானது கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள கடலோர பகுதியில் இந்த பெரிய காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 152 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள MySE-16-260 என்ற காற்றலை 16 மெகாவாட் திறனை கொண்டுள்ளது. இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளம் கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஒவ்வொரு பிளேடும் 123 மீட்டர்கள் மற்றும் 54 டன் எடை கொண்டதாக உள்ளது. இதையடுத்து, இந்த காற்றலை மூலம் ஒரு வருடத்திற்கு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட 36,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று த்ரீ கோர்ஜஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த பெரிய காற்றலை அமைக்கப்பட்டதன் மூலம்...

ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்பட பெள்ளிக்கு அரசு வேலை..! முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் முகாம்களில் வளர்க்கப்படும் வளர்ப்பு யானைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படமாகும். இந்த படத்தில் யானைகளை வளர்க்கும் யானை பாகன் பொம்மன்-பெள்ளி நடித்திருந்தனர். இந்த படம் ஆஸ்கார் விருதை பெற்ற நிலையில், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த தம்பதிக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த ஆவண படத்தை பார்த்த பலரும் முதுமலை காட்டுக்கு சென்று அந்த யானைகளையும் அந்த படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியும் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தனர். இந்நிலையில், யானை பாகனாக நடித்த பெள்ளிக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வழங்கியுள்ளார்.

0

நீங்க அதிகமா மாத்திரை சாப்பிட்டு வறீங்களா? இனி எல்லாத்துக்கும் ஒரு மாத்திரை போதும்..! ஸ்விஸ் கார்னியர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு கண்டுபிடிக்கப்படுதோ அதே அளவிற்கு மனித உடலில் ஏற்படும் நோய்களும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயதில் இருப்பவர்களுக்கு கூட சர்க்கரை, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதாக மத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நோய்கள் எந்த அளவிற்கு அதிகமாகிறதோ அதனை கட்டுப்படுத்த உதவும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மனதளவிலும் சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், அதிக அளவில் மாத்திரைகள் எடுத்து கொள்வதை தவிர்க்கும் வகையில் ஸ்விஸ் கார்னியர் மருந்து உற்பத்தி நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 3 மாத்திரைகள் எடுக்க வேண்டிய ஒருவர் இனி ஒரு மாத்திரை மட்டும் எடுத்தால்...

கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? அப்போ இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

முன்னதாக கிரெடிட் கார்டு பற்றிய நன்மைகள் பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் கிரெடிட் கார்டின் பயன்பாடு அந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்பொழுது கிரெடிட் கார்டை பலரும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். கிரெடிட் கார்டுகளை கொண்டு மக்கள் அவசர நேரத்தில் பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால், அதனை வட்டியுடன் திரும்ப செலுத்த குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கபட்டிருக்கும். இந்த காலஅவகாசத்திற்குள் அதனை செலுத்த வில்லை என்றால் அதற்கு மேன்மேலும் வட்டி விதிக்கப்படும். இந்நிலையில், இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளது. இதனை பற்றி முழுமையாக தெரியாதவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டாம். மேலும் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி விதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கிரெடிட் கார்டுகளை...

0

தமிழக அரசு பள்ளி மாணவர்களே சீக்கிரம் ரெடியாகுங்க… உங்களுக்கும் மாதம் ரூ.1000 தராங்களாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அரசு பள்ளி மாணவர்கள் மாதம் ரூ.1000 பெறுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு 2023-2024 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்நிலையில், இந்த திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து இளநிலை படிப்பினை தொடரும் வரைக்கும்...

0

இனிமே இந்த நாட்டுக்கு போனா இந்த பொருளை மறந்தும் கூட எடுத்துட்டு போகாதீங்க… ஏன் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு ஈடாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துதான் வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடையே அதிகரித்த காரணத்தால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அதிக அளவு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காததால் இதை நிலத்தில் போடும்பொழுது அந்த இடத்தில் மழை நீர் கூட உள்ளே நுழைய முடியாமல் போய்விடுகிறது. இந்நிலையில், இந்த பூமியை நமக்கு மட்டும் என்று நினைக்காமல், அடுத்த தலைமுறைக்கும் வாழும் தகுதி உடையதாக விட்டுச்செல்ல வேண்டும். இருக்கும் வளங்களை எல்லாம் நாமே எடுத்துக்கொண்டு குப்பை தொட்டி போன இந்த பூமியை விட்டுச் சென்றால் அடுத்த தலைமுறை பிளாஸ்டிக் குப்பைகளோடு தான் வாழ வேண்டிய சூழல் இருக்கும். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை...

The-issue-of-2000-rupee-note-the-new-notification-issued-by-Reserve-Bank-recently-read-now-1068x601 0

2000 ரூபாய் நோட்டு விவகாரம்… சற்றுமுன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியபின் மக்களிடம் அதிகமாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போனது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் சென்று மாற்றி கொள்ளலாம் அல்லது தங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றி வருகின்றனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சில கட்டுபாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை மட்டுமே வங்கியில் மாற்ற முடியும் என்றும் இதற்கான கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி...