TNPSC குரூப் 2 தேர்வுக்கான Answer Key வெளியீடு: டவுன்லோட் செய்ய – TNPSC Group 2 Answer Key 2025
TNPSC Group 2 Answer Key 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (குரூப் 2/2A) முதல்நிலைத் தேர்வு இன்று (செப்டம்பர் 28, 2025) மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்களால் எழுதப்பட்டது. TNPSC Group 2 Answer Key 2025 தேர்வு எழுதிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உத்தேச விடைக்குறிப்பு (Tentative Answer Key) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் உங்கள் செயல்பாடு எப்படி இருந்தது, நீங்கள் பெற்ற தோராய மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை அறிய இந்த விடைக்குறிப்பு உதவும். குரூப் 2 தேர்வு உத்தேச விடைக்குறிப்பு பிரபலமான பயிற்சி மையங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவுத் தாள் அடங்கிய...