தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசின் புதிய வியூகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசின் புதிய வியூகம்! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்க இருக்கும் மளிகை பொருட்களின் டெண்டர் நடவடிக்கை குறித்த முக்கிய விவரங்களின் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு: தமிழகத்தில் ஜனவரி மாதம் வர இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக பொங்கல் வைக்க தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகிய பொருட்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனுடன் கடந்த சில வருடங்களாக ரொக்கப்பணம் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை ரொக்கப்பணத்திற்கு பதிலாக பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி,...