CryptoCurrency Explained in Tamil 

CryptoCurrency Explained in Tami கிரிப்டோகரன்ச  என்றால் என்ன ?

கிரிப்டோகரன்சி
CryptoCurrency Explained

CryptoCurrency Explained

கரன்சி(Currency) என்றால் என்ன? பண நோட்டு (Currencies) , சில்லறைகள் (coins), டாலர்கள் (dollars), யூரோக்கள் (Euro) என சொல்லலாம். இவை அனைத்திற்கும் வடிவம் உண்டு. இவற்றை உங்கள் கண்களால் பார்க்க, கைகளால் கொடுத்து வாங்க முடியும்.

இவை அனைத்திற்கும் மாற்றானது “கிரிப்டோகரன்சி (Cryptocurrency)“. ஆம் இது முற்றிலும் டிஜிட்டல் மயமானது. உங்களது கண்களால் பார்க்கவோ, தொடவோ முடியாது. இவை அனைத்தும் இணையத்தில் உள்ள வாலட் களில் எண் வடிவத்தில் இருக்கும். அந்த கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்பவர்களிடம் நீங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்டுத்திக்கொள்ளலாம், இணைய வர்த்தகத்தில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கிரிப்டோ கரன்சியை உருவாக்குவது யார் (Who create cryptocurrency) ?

இணையத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் கிரிப்டோகரன்ஸிக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவை அனைத்துமே ஏதோ ஒரு குழுவால் ஏற்படுத்தப்பட்டவையே .

கிரிப்டோ கரன்சி என்றவுடன் மக்களின் நினைவிற்கு முதலில் வருவது பிட்காயின் (bitcoin) தான். இது 2009 இல் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto) என்கிற தனிநபர் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அப்படிப்பட்ட நபர் யாரென்றே தெரியவில்லை. இதனை உருவாக்கியவர் தனி நபரா அல்லது குழுவா என கண்டுபிடிக்கமுடியவில்லை.

 

கிரிப்டோ கரன்சியை மக்கள் நம்புகிறார்களா (Is people trust cryptocurrency)?

பிட்காயின் (bitcoin) ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் விலை சில டாலர்களே. ஆனால் தற்போது ஒரு பிட்காயினின் விலை $10000 டாலர்களை தாண்டி நிற்கிறது. இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம் மக்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதனை.

மக்கள் இதனை வரவேற்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இதனை யாராலும் கண்காணிக்க முடியாது, ஆகையால் இதற்க்கு வருமான வரி என்பது அவசியமில்லை ஆகையால் தான் தற்போது நிறுவனங்கள் கூட தற்போது பிட் காயின்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.

மார்க்கெட்டில் தற்போது இருக்கக்கூடிய கிரிப்டோ கரன்சிகள் என்ன (Available Cryptocurrencies in world) ?

தற்போது புழக்கத்தில் பல கிரிப்டோ கரன்சிக்கள் இருக்கின்றன. அவற்றில் பிட்காயின் முன்னிலை வகிக்கிறது.

இணையத்தில் புழக்கத்தில் உள்ள கிரிப்டோ கரன்ஸிக்கள்

கிரிப்டோ கரன்சி வாங்கலாமா ? 100% நம்பிக்கையானதா ?

இணையத்தில் பல கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் இவற்றை வாங்குவது என்பது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை போன்றதுதான்.

எப்போது இதன் மீதான நம்ம்பிக்கை மக்களிடத்தில் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போது அதன் மதிப்பு குறைந்துபோகும்.

  1. CryptoCurrency Explained in Tamil

உருவாக்கியவர்களே ஒருநாள் அதனை அழித்துவிட்டால் யாரிடமும் முறையிட வாய்ப்பிருக்காமல் போய்விடும்.

பல நாடுகள் ,பல நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டாலும் இந்தியாவை பொறுத்தவரை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.

Reference links :

CryptoCurrency Explained in Tamil

https://coinmarketcap.com/all/views/all/

https://www.investopedia.com/terms/c/cryptocurrency.asp

http://www.moneycontrol.com/cryptocurrenc

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *