தமிழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்கள்… தேர்வுமுறை வெளியீடு!

Driver Conductor Jobs in Tamil Nadu Selection Release just now read it fast

தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், தற்பொழுது இந்த எழுத்து தேர்வுக்கான நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வு, நேர்காணலில் மட்டும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர முடியாது என்பதால் எழுத்துத் தேர்வும் நடத்த பரிந் துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், எழுத்து தேர்வைப் பொறுத்தவரை தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்தை ஆலோசித்து இறுதிசெய்ய வேண்டும். அந்நிறுவனத்திடம் பொது அறிவு, போக்குவரத்து விதிகள், மெக்கானிக் பிரிவு, வாகனம் ஓட்டும் திறன் ஆகியவை குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் தெரிவிக்க வேண்டும். இதில் பொதுத் தமிழ்த் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டு மற்ற தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *