தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் கொளுத்தி வந்தது. அதிலும் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வந்தது. ஆனால் அந்த நிலை தற்பொழுது மாறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் சற்று குளிர்ந்த நிலை உருவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 18.07.2023 மற்றும் 19.07.2023 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20.07.2023 முதல் 24.07.2023 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.