அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை 06.05.2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு
www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது
சென்னை தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கல்லூரிக் கல்வி இயக்ககம் இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை 2024-2025 அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre மூலம் விண்ணப்பிக்க AFC) வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணம் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
ஒரு மாணவருக்கு : ரூ.48/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/-
கட்டணம் செலுத்தும் முறை:-
 விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுகட்டணம் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் “The Director, Directorate of Collegiate Education, Chennai 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
தொடர்பு எண்: 044-24343106 / 24342911
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
www.tngasa.in
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *