உங்க வீட்லையும் பெண் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இந்த செய்தியை உடனே படிங்க… கண்டிப்பா உங்களுக்கும் யூஸ் ஆகும்!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் கல்வி வளர்ச்சி, அவர்களின் வாழ்வாதார வளர்ச்சி போன்றவைகளுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

haapy news Are there any girls in your household Then read this message right away

அந்த வகையில், தமிழக அரசால் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மேற்கொலப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 50,000அந்த குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ. 25,000 என வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு முறையும் திட்டம் புதுப்பிக்கப்பட்டு குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தொகை வட்டியுடன் வழங்கப்படும்.

இந்நிலையில், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணபித்த பலரும் புதுபிகாததால் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களிலும் மாதந்தோறும் 2 வது செவ்வாய்க்கிழமைகளில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *