இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

 
இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
இரவும், பகலுமாய் இடைவிடாது பெய்யும் கனமழை – ஆக .26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு மட்டும் இன்று முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை:

ஜூலை மாத இறுதியிலிருந்தே தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதன் பின்னர், ஓரளவுக்கு மழையின் அளவு குறைந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்கsளாகவே மீண்டும் கனமழை துவங்கியிருக்கிறது. இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், கனமழையால் சட்லஜ் ஆற்றில் நீர் பெருகி சில கிராமங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் இரவும் பகலமாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால், மழையால் அதிகம் சேதமடைந்துள்ள பெரோஸ்பூர் மற்றும் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப் மாவட்டத்தின் சில பள்ளிகளுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையின் அளவை பொருத்து பிற மாநிலங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *