தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சகணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள், மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என பல புகார்கள் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒரு சில ரேஷன் பொருட்கள் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்களுக்கு குறுஞ்செய்தி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.