பெண்களே உங்களுக்கு இன்னும் மெசேஜ் வரலையா..? கவலை வேண்டாம்..! மீண்டும் ஒரு வாய்ப்பு தராங்களாம்!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் இருகட்டங்களாக நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Ladies have you not received the message yet do not worry Give me another chance read it

இந்நிலையில், தற்பொழுது அதிகாரிகள் விண்ணப்பங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை வீடு வீடாக சென்று ஆய்வு செய்து இறுதி பட்டியலை தயார் செய்து வருகின்றனர். இவற்றில் தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என தனித்தையாக பிரித்து அவற்றில் ஆதார் எண் மற்றும் பாண் எண் இணைக்கப்பட்டுள்ளதாக என்பதையும் சரிபார்த்து வருகின்றனர்.

 

இதையடுத்து, இந்த திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அவர்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும். அதே போல இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். நிகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்கள் கழித்து மீண்டும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *