தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் கவனத்திற்கு – அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்திருக்கும் கார்டுதாரர்களின் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புதிய ரேஷன் கார்டு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது ரூ.1000 உரிமைத் தொகைக்கான பணிகள் முழுமையாக முடிவடையும் வரைக்கும் தற்காலிகமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் 15 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் ரேஷன் கார்டு மூலமாக கூடுதல் சலுகைகளை பெறுவதற்கு ஒரே குடும்பத்தில் தாய், தந்தை பெயரில் ஒரு ரேஷன் கார்டும், மகன், மருமகள் பெயரில் மற்றொரு ரேஷன் கார்ட்டிற்கும் விண்ணப்பித்துள்ளனர். இது போல சூழ்ச்சி வேலைகள் தற்போது நடைபெறுவதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிக்கும் பொது மக்களின் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக திருமணமானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிக்கையை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படும் எனவும், பொது மக்களின் வீட்டிற்கு நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் கூடிய விரைவில் ரேஷன் கார்டு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.