பொறியியல் கலந்தாய்வு முடிவு : 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதையடுத்து, தற்பொழுது பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அவற்றில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 442 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில்,...