தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 60000 பணியிடங்கள் நிரப்ப படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் 31 2024 ம் தேதியில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 59,864 காலியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மொத்தமுள்ள 1,42,208 பணியிடங்களில் பாதிக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்ப படாமல் இருப்பதை அறிய முடிகிறது. இதற்கு முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்கள் தேர்வு எப்போது நடந்தது என்றால், கடந்த 2021ல் 9613 கேங் மேன்கள் தேர்வு நடைபெற்றது. அதற்கு முன்பு ஆட்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு TNEB தரப்பில் வெளியிடப்பட்ட...