இலவசமா ஒரு வீடு வேணுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
பிரதமர் அவாஸ் யோஜனா எனப்படும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நீங்கள் வீட்டை பெற விரும்பினால் பின்வருவனவற்றை செய்தால் போதும். அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பலன் பெறுவார்கள். இதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் இருந்தால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகளின் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம். இத்திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விளம்பரம் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் இத்திட்டத்தின் மூலம் சொந்த வீடு கட்டலாம். இதற்கு சில...