தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து – அமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பெற்றோர்களின் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதன் படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள்...