ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா செப் 14 குள்ள இத பண்ணிடுங்க… இல்லனா எதுவுமே பண்ண முடியாதாம்!!
இந்தியாவில் ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகவும் பார்க்கப்படுவது ஆதார் அடையாள அட்டையத்தான். அதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு போன்றவற்றுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறுகையில், இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என தெரிவித்தது. அதன்பின் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 14...