SBI வங்கி 2000+ காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு, கல்வி தகுதி & முழு விவரங்களுடன் ..!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Probationary Officers (PO) பணிகளுக்கு என காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை படைத்தவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | SBI |
பணியின் பெயர் | Probationary Officers (PO) |
பணியிடங்கள் | 2056 |
விண்ணப்ப தேதி | 05.10.2021-25.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
SBI காலிப்பணியிடங்கள் :
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் Probationary Officers (PO) பணிகளுக்கு என மொத்தமாக 2056 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வயது வரம்பு :
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை பொறுத்து குரைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
SBI கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
SBI ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும்.
PO தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.