SBI வங்கியில் 800 உதவி மேலாளர் கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ

SBI வங்கியில் 800 உதவி மேலாளர் கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ

SBI Technical Job: அனைவருக்கும் வணக்கம்! வங்கித் துறையை வேலையை எதிர்பார்க்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI தனது டெக்னிகல் பிரிவில் 800 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தையும் கீழே நான் தொகுத்து கொடுத்துள்ளேன். விண்ணப்பதாரர்கள் இதனை தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி விவரங்கள்

நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஸ்பெஷலிஸ்ட் கேடரில் 800 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பணியிடங்களின் பிரிவுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

எஸ் பி ஐ வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்.டெக் அல்லது எம்.எஸ்.சி ஆகிய பாடங்களில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை தொடர்புடைய பணிகளில் பணி அனுபவம் தேவை.

வயது விவரங்கள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணியிடங்களுக்கு மட்டும் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்தப் பணியிடங்களுக்கு ரூபாய் 48,480 முதல் 85,920 வரை சம்பளம் கிடைக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/sbisco2aug24/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஓபிசி பிரிவை சேர்ந்தவராக இருந்தால் ரூபாய் 750 விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ் சி, எஸ் டி வகுப்பைச் சார்ந்தவராக இருந்தால் அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 20 செப்டம்பர் 2024

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04  அக்டோபர்  2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *