Shortant Exam 2021 , Shortant Exam CM Call Partition Filing 2021 , Full Details

 

Shortant Exam 2021 , Shortant Exam CM Call Partition Filing 2021 , Full Details

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை 26/09/2021ல் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட ஆங்கில சுருக்கெழுத்து முதுநிலை தேர்வில் வாசிக்கும் முறை டிஜிட்டல் ஆடியோ முறையில் நடைபெற்றது. ஆனால் அதில் வாசித்த வாசிப்பாளரின் குரல் வளம் சரியாக இல்லை அதுமட்டுமின்றி அவர் வாசிக்கும் சொற்கள் எதுவும் புரியவில்லை மேலும் சீரான வேகத்தில் வாசிக்காமல் ஏற்ற இறக்கத்துடன் வாசித்துள்ளார் அதுமட்டுமின்றி இரைச்சலாக ஆகவும் எதிரொலிக்கும்படி ஆடியோ இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுக்கு சென்ற மாணவ மாணவிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். தேர்வு அறையில் வாசிக்கப்படும் 7நிமிட ஆடியோவே மாணவர்களது தேர்வு முடிவுகளை நிர்ணயம் செய்கிறது ஆனால் அது சரியில்லாத போது மாணவ மாணவிகளின் 2 வருட உழைப்பு வீணாகிவிடுகிறது அரசுப் பணி கனவும் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது.
எனவே இப்பிரச்சினை சரி செய்ய மறு-தேர்வு வேண்டும் அதுவும் 20நாட்களுக்கு உள்ளாகவும்‌ ஏற்கனவே நடைமுறையில் இருந்த நேரடி வாசிப்பாளர்களை கொண்டு தேர்வு வைக்கவேண்டும் என அனைத்து மாணவ மாணவிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

 

Tamilnadu CM Cell Online Petition Filing

✅How to SHORTAND CM Call Petitions
👇👇👇

  1. https://bit.ly/3idQ3xV
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *