12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு துறையில் 3712 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்ய – SSC Various Post Job Recruitment 2024

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு துறையில் 3712 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! அப்ளை செய்ய – SSC Various Post Job Recruitment 2024

SSC Various Post Job Recruitment 2024

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் SSC என்பது இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் துணை அலுவலகங்கள் மற்றும் ஏஜென்சிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை பணியமர்த்துவதற்காக இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பாகும்.

SSC Various Post Job Recruitment 2024
SSC Various Post Job Recruitment 2024

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  07.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பதவிகளின் விவரம்:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’, காலியிடங்களின் எண்ணிக்கை 3712.

கல்வித் தகுதி :

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பதவிகளுக்கு பன்னிரெண்டாம் (12) வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் சில பதவிகளுக்கு சில கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.

வயதுத் தகுதி :

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் 01.08.2024 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பள விவரம்:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200). Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300). Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4 (Rs. 25,500-81,100).

தேர்வு செய்யப்படும் முறை :

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணியிடங்களுக்கு கணினி வழியில் (Computer Based Examination) முதல்நிலை தேர்வு (Tier-I), முதன்மைத் தேர்வு (Tier-II) மற்றும் திறனறி தேர்வு (Skill Test/ Typing Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

கணினி வழி முதன்மைத் தேர்வு 405 மதிப்பெண்களுக்கு 2 மணிநேரம் 15 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலத்தில் 40 கேள்விகள், பொது அறிவு பகுதியிலிருந்து 20 கேள்விகள், திறனறிதல், கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள், கணினி பகுதியிலிருந்து 15 கேள்விகள் என மொத்தம் 135 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண்கள் கழிக்கப்படும். திறனறி தேர்வானது தகுதித் தேர்வாகும். இதில் தட்டச்சு உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ரூபாய்  100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி  07.05.2024. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்வையிடவும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

SSC Various Post Job Recruitment 2024
SSC Various Post Job Recruitment 2024

Notification Link:

Apply Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *