தமிழகத்தில் மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான பணிகளை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.இந்த பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்த நிலையில் இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது.
மகளிர் உரிமைத்தொகைக்கான முதற்கட்ட பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 75 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திட்டத்திற்கான சிறப்பு முகாம்களும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட பனியின் போது விண்ணப்பம் வழங்க தவறியவர்களுக்கு விண்ணப்பம் வழங்க இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் விண்ணபங்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.