தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 27ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டய முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பினை அரசுத் தேர்வு இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஆசிரியர் கல்வி பயிற்சி தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படும்.

மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள்களில் ஏதேனும் பிழை இருந்தால் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மறு கூட்டல் மற்றும் ஒளி நகல்களை பெற விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக அக்டோபர் மூன்றாம் தேதி காலை 11 மணி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ. 205 மற்றும் ஒளிநகல் பெற வேண்டி விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ. 275 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *