TN-12th-துணைத்தேர்வு-முடிவுகள்-2022-

TN-12th-துணைத்தேர்வு-முடிவுகள்-2022-

TN-12th-துணைத்தேர்வு-முடிவுகள்-2022-

TN 12th துணைத் தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு !

தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை எளிதாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது பற்றிய விளக்கங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

TN 12th துணைத்தேர்வு முடிவுகள்:

நடைபெற்ற ஜூலை / ஆகஸ்ட்‌ 2022, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வெழுதிய தேர்வர்கள்‌ தேர்வு முடிவினை, மதிப்பெண்‌ பட்டியலாக (Statement Of Marks) 22.08.2022 (திங்கட்கிழமை) பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ http://dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண்‌ (Roll No.) மற்றும்‌ பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து ஆன்லைனில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

 

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்‌ பின்வருமாறு:

1. http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

2. அதில்‌ “HSE Second Year Supplementary Exam, Jul / Aug 2022 – Result – Statement Of Marks Download” என்பதை கிளிக் செய்து தோன்றும்‌ பக்கத்தில்‌ தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண்‌ (Roll No.) மற்றும்‌ பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களது மதிப்பெண்‌ பட்டியலினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

ஐூலை / ஆகஸ்ட்‌ 2022, மேல்நிலை துணைத்‌ தேர்வுக்கான விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 24.08.2022 (புதன்கிழமை) மற்றும்‌ 25.08.2022 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்‌.

 

விடைத்தாள்‌ நகல்‌ (Scan Copy of the Answer Script) பெறுவதற்கான கட்டணம்‌:

ஒவ்வொரு பாடத்திற்கும்‌ – ரூ.275/-

மறுகூட்டல்‌ -॥ (Re-totaling-I) கட்டணம்‌ :

உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும்‌ – ரூ.305/-

ஏனையப்‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) – ரூ.205/-

Download TN 12th Arrear Result 2022

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *