12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதிகள்! பள்ளிக்கல்வித்துறை இன்று உறுதிப்படுத்தியது – TN 12th and 10th Result Result Conform Release Date 2024

12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதிகள்! பள்ளிக்கல்வித்துறை இன்று உறுதிப்படுத்தியது – TN 12th and 10th Result Result Conform Release Date 2024

Table of Contents

TN 12th and 10th Result Result Conform Release Date 2024

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

TN 12th and 10th Result Result Conform Release Date 2024
TN 12th and 10th Result Result Conform Release Date 2024

தமிழகத்தில் பொதுத்தேர்வு:

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த மாா்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைந்தது.

12 ஆம் வகுப்பு தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணி:

இதனிடையே 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது  என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள்:

இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, மே 6 ஆம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மற்றும் மே 10 ஆம் தேதி 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TN 12th and 10th Result Result Conform Release Date 2024

Official Website:

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *