12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் பார்ப்பதற்கான லிங்க் இதோ – TN 12th Standard Exam Result 2024 – Media Corner

TN 12th Standard Exam Result 2024

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் TN 12th Exam Result மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம். நீங்கள் உங்களுடைய Result பார்ப்பதற்கான Link இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 

TN 12th Standard Exam Result 2024
TN 12th Standard Exam Result 2024

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

For More Job Info Join: TN 12th Standard Exam Result 2024

விடைத்தாள் திருத்துதல் பணி: 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதி முடிந்த நிலையில், மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றன. மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் முடிவடைந்தது. 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்படிப் பார்ப்பது?

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக  காணலாம்.

மேலும், 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:

12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு  தேர்வு முடிவுகள் Tamilnadu 12th Standard Result அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TN 12th Standard Exam Result 2024
TN 12th Standard Exam Result 2024

TN 12th Standard Result 2024 Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *