தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது! முழு விவரம் – TN 12th Standard Result Date Announcement 2024

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது! முழு விவரம் – TN 12th Standard Result Date Announcement 2024

 TN 12th Standard Result Date Announcement 2024

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

TN 12th Standard Result Date Announcement 2024

அதேநேரம், 7951 பள்ளி மாணவர்கள் மற்றும் 1009 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8960 பேர் தேர்வெழுதவில்லை. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள்:

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு நிறைவு பெற்றதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 6 ஆம் தேதி தேர்வு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10ஆம் மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் அதேசமயம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி துவங்கிய தேர்வு மார்ச் 25 ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *