தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.70,000/-

tn-forest-jrf-scientist-job-notification-2022

tn-forest-jrf-scientist-job-notification-2022

தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.70,000/-

தமிழ்நாடு வனத்துறையில் (TN Forest Department) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் JRF, Scientist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Forest Department (TN Forest)
பணியின் பெயர் JRF, Scientist
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TN Forest காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், JRF பணிக்கு 1 இடம் மற்றும் Scientist பணிக்கு 2 இடம் என மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

TN Forest கல்வித் தகுதி:

  • Scientist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Biotechnology/ Molecular Biology & Genetics/ Genetics Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Ph.D பட்டம் அல்லது Doctoral Degree முடித்திருக்க வேண்டும்.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Biotechnology/ Molecular Biology & Genetics/ Genetics Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Sc / M.Tech அல்லது ஏதேனும் ஒரு Masters Degree முடித்திருக்க வேண்டும்.

 

TN Forest வயது விவரம்:

  • 01.01.2022 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் SC / ST / BC / Women / MBC வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 5 ஆண்டு வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

TN Forest அனுபவ விவரங்கள்:

  • Scientist பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பிரிவில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

TN Forest ஊதிய விவரம்:

  • Scientist பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.70,000/- பெறுவார்கள்.
  • Junior Research Fellow பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.30,000/-பெறுவார்கள்.

 

TN Forest தேர்வு முறை: tn-forest-jrf-scientist-job-notification-2022

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Forest விண்ணப்பிக்கும் முறை: tn-forest-jrf-scientist-job-notification-2022

இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 04.03.2022 ம் தேதிக்கு முன்னதாக அனுப்பி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TN Forest மின்னஞ்சல் முகவரி:

aiwcrte@gmail.com

Download Scientist  Notification & Application PDF

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *