தமிழக மகளீர் உரிமைத்தொகை வழங்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்! படித்து பாருங்க – TN Magalir Urimai Togai Issue Important Update 2024

TN Magalir Urimai Togai Issue Important Update 2024

செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உரிமை தொகையாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூபாய் 1000 தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

TN Magalir Urimai Togai Issue Important Update 2024
TN Magalir Urimai Togai Issue Important Update 2024

தமிழகத்தில் 2024 இந்தியப் பொதுத் தேர்தல் வரும் 18 வது மக்களவையின் 39 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்டத்தின் போது ஏப்ரல் 19 அன்று நடைபெறும் . தேர்தல் முடிவு 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை தொடர்ந்து வழங்கப்படுமா:

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதியால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுமா என பெண்கள் குழப்பத்தில் இருந்தனர்.

தலைமை தேர்தல் ஆணையர் கருத்து:

இந்த திட்டம் ஏழைகளின் வாழ்வாதாரத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதனால் இது தடைபடுமா என பெண்கள் அச்சத்தில் இருந்தனர். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு கூறுகையில், மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 அளிக்க எந்தவித தடையும் இல்லை என தெரிவித்துள்ளார். செயல்பாட்டில் இயங்கும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் ஆணையத்தில் விதி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *