தமிழகத்தில் புதிதாக உருவாக உள்ள 7 மாவட்டங்களின் எல்லைகளின் விவரங்கள்! TN New 7 District Patrician Details 2024 

  • தமிழகத்தில் புதிதாக உருவாக உள்ள 7 மாவட்டங்களின் எல்லைகளின் விவரங்கள்! TN New 7 District Patrician Details 2024

    TN New 7 District Patrician Details 2024 

    தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காகவும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையிலும் இந்த புதிய மாவட்டங்களைப் பிரிக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    TN New 7 District Patrician Details 2024 
    TN New 7 District Patrician Details 2024

    தமிழ்நாட்டில்  வரும் வாரங்களிலே 7 புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல். புதிதாகப் பிரிக்கப்பட உள்ள இந்த மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்களை உள்ளடக்கி உள்ளது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    புதிய மாவட்டங்கள் பிரிக்க காரணம்:

    தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிப்பது வழக்கமாக ஒன்றாகும்.

    அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையானது மிகுதியாக காணப்படும் போது அந்த மாவட்டத்தை இரண்டாகவும் பிரிக்கப்படுகின்றது அதேபோல் குறிப்பிட்ட நகராட்சியில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது அதை மாநகராட்சியாக தரம் உயர்த்தவும் அதேபோல பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றது இதே போன்று ஊராட்சிகளும் பேருராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றது.

    புதிய மாவட்டங்கள், மாநகராட்சிகள் விவரம்:

    தற்போது தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படுகின்றது. அந்த மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் உள்ளடக்கி உள்ளது புதிதாக உருவாகும் மாநகராட்சிகள் எவை புதிதாக உருவாகும் நகராட்சி கலவை புதிதாக உருவாகும் பேரூராட்சிகள் எவை என்பதை நாம் இப்போது முழுமையாக காணலாம். தற்போது இது தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் அறிவிப்பாக வெளியிட வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

    • திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பிரிந்து ஆரணி மாவட்டம் ஆகிறது.
    • கடலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து விருத்தாசலம் மாவட்டம் ஆகிறது.
    • கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து பொள்ளாச்சி மாவட்டம் ஆகிறது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து கும்பகோணம் மாவட்டம் ஆகிறது.
    • சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து ஆத்தூர் மாவட்டம் ஆகிறது.

    விருத்தாசலம் மாவட்ட தாலுக்காக்கள்:

    • விருத்தாசலம்
    • ஸ்ரீமுஷ்ணம்
    • திட்டக்குடி
    • வேப்பூர் தாலுக்காக்கள் ஆகிறது.

    ஆரணி மாவட்ட தாலுக்காக்கள்:

    • ஜமுனாமரத்தூர்
    • போளூர்
    • ஆரணி
    • செய்யாறு
    • வெண்பாக்கம்
    • வந்தவாசி தாலுக்காக்கள் ஆகிறது.

    பொள்ளாச்சி மாவட்ட தாலுக்காக்கள்:

    • கிணத்துகடவு
    • பொள்ளாச்சி
    • ஆனைமலை
    • வால்பாறை
    • உடுமலை
    • மடத்துகுளம் தாலுக்காக்கள் ஆகிறது.

    கும்பகோணம் மாவட்ட தாலுக்காக்கள்:

    • கும்பகோணம்
    • பாபநாசம்
    • திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள் ஆகிறது.

    புதியதாக மாநகராட்சிகளாக தரம் உயரும் நகராட்சிகள்:

    • திருவண்ணாமலை
    • காரைக்குடி
    • புதுக்கோட்டை
    • பொள்ளாச்சி
    • நாமக்கல்
    • கோவில்பட்டி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும்

    புதியதாக உருவாகும் நகராட்சிகள் விவரம்:

    பெருந்துறை, சென்னிமலை, அவினாசி, அரூர், பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம், போளூர், செஞ்சி, காட்டுமன்னார்குடி,திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, பொன்னமராவதி, தம்மம்பட்டி, அந்தியூர், சங்ககிரி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டி, உத்தமபாளையம், வேடசந்தூர், முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும்.

    புதியதாக உருவாகும் பேரூராட்சிகள் விவரம்:

    • படப்பை
    • ஆண்டிமடம்
    • திருமானூர்
    • வேப்பந்தட்டை
    • தியாகதுருகம்
    • வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும்.

    இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *